வெளிப்படுத்தப்பட்ட மேசியா
அறக்கட்டளையின் நோக்கம்
The Boaz World Word Project Foundation ஆனது 1995-இல் நிறுவப்பட்டது; உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரிசுத்த வேதாகமத்தின் செய்தியைப் பரப்புவதே இதன் நோக்கமாகும். இந்த விஷயத்தில் நிர்ணயக் காரணியாக இருப்பது யோவான் 5:39 இல் நாம் வாசிக்கின்றபடி, மேசியா இயேசுவின் வார்த்தைகளேயாகும்: ‘வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே.’ இந்த வார்த்தைகளுடன், ஏசு தெனாக்-இல் உள்ள மேசியா குறித்த வசனங்களைக் குறிப்பிடுகின்றார், மேலும் அதைத் தொடர்ந்து அவர் தன் சீடர்களுக்குக் கற்பித்தார். இதே வழியில் அவர்கள் மேசியாவைப் பற்றி ஒவ்வொன்றையும் கற்றுக் கொண்டனர். மேசியா ஏசு வேதாகமத்தின் எந்த வசனங்களைக் குறிப்பிட்டார் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். இந்த வசனங்கள் பெரும்பாலும் தெனாக்-இல் (OT) உள்ள தீர்க்கதரிசனங்களைக் குறிப்பிடுபவையாக உள்ளன, அவை மூலமாகவே தேவனாகிய கர்த்தர் வாக்குத்தத்தம் அளித்த மேசியாவைக் குறித்த தனது திட்டத்தை தன் மக்களாகிய இஸ்ரவேலருக்குத் தெரியப்படுத்தினார்.
மேசியா பற்றிய எங்களது இணையதளத்திற்கு வரவேற்கின்றோம்!
பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மேசியாவைப் பற்றி நீங்கள் மேலும் அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? ஆம் எனில், தயவுசெய்து இந்நூலைக் குறித்துக் கொள்ளுங்கள்:
பரிசுத்த வேத ஆகமங்களில் வெளிப்படுத்தப்பட்ட மேசியா – ஆசிரியர்: ஹென்றிக் ஷிப்பெர் – தெனாக்-இல் (OT) மேசியாவைக் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட சொற்கள் விளக்கப்பட்டுள்ளன.
பரிசுத்த வேத ஆகமங்களில் வெளிப்படுத்தப்பட்ட மேசியா
இதன் நோக்கத்தை உணர்ந்து கொள்ளும்பொருட்டு, இந்த அறக்கட்டளையானது தெனாக்/தோராவிலிருந்து வாக்குத்தத்தம் அளித்த மேசியாவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குறிப்பிடும் 300க்கும் மேற்பட்ட மேசியாவின் வசனங்களை உள்ளடக்கித் தொகுக்கப்பட்ட ஒரு நூலைக் கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட வசனங்கள் விளக்கப்பட்டு, புதிய ஏற்பாட்டில் தொடர்புடைய வசனங்களால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நூலானது ஒரு தனித்துவமிக்க வேதாகம ஆய்வு நூலாகும், மேலும் இது வேதாகம வசனங்களைக் குறிக்கின்ற ஒரு தனித்துவமிக்க மேற்கோள் பணியாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலானது ஹென்றிக் ஷிப்பரால் பரிசுத்த வேத ஆகமங்களில் வெளிப்படுத்தப்பட்ட மேசியா என்று தலைப்பிடப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு இலவச நகலை வாசியுங்கள் அல்லது பதிவிறக்கம் செய்யுங்கள்.
எங்கள் இணையதளம் வாயிலாக நூலின் அனைத்துப் பதிப்புகளையும் நீங்கள் வாசித்து, பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.